உலகத்தில் உள்ள ஒவ்வொரு விசயமும் அறியபடும் போது,அதிசயம் தான்.ஆனால் அந்த விஷயமானது அப்படியே தான் இருக்கிறது.அதன் பின் அது பழக்கமாகிவிடுகிறது.
அது போல ஓர் உன்னதமான விஷயம் தான்,காதல்.காதல் என்கிற விஷயம் பழக்க பட்டதாக இருக்கலாம்.ஆனால் காதலிப்பதும்,காதலிக்க படுவதும் ஒரு உன்னதமான அதிசயமான விஷயம்.
காதல் அறியபட்டதாகின்,காதலிப்பதும்,காதலிக்க படுவதும் ஏன் அதிசயமானது ஆகிறது என கேட்கலாம்.இங்கே காதலிப்பதிலும்,காதலிக்கபடுவதிலும்,காதல் அறியபடுவதில்லை.மாறாக ஒவ்வொருவரும்,தன்னை தானே அறிகிறார்கள்.
Alique padamse என்னும் விளம்பர உத்தியின் மன்னர்,ஒருமுறை அளித்த பேட்டியில்,கூறுகிறார்-நான் ஒரே சமயத்தில் பலருடன் காதல் கொண்டிருக்கிறேன்.ஆனால் ஒவ்வொருவரிடமும் புதுமையாகவே உணர்கிறேன்.
காதல் என்பது காமம் இல்லை.காதலின் வழியாக தன் காமத்திற்கு துணை தேடி கொள்ளலாம்.ஆனால் காதல் ஆனது முற்றிலும் வேறுபட்டது.நீங்கள் யாரையாவது,ஒரு சூழலில் காதலித்து இருக்கலாம்.அவர் மீது உங்கள் மூச்சு காற்று கூட பட முடியாத தூரத்தில் காதலித்து இருக்கலாம்.பத்து வயதில்,ஆறாம் வகுப்பில் இது நடந்திருக்கலாம்.
இப்போது,சுமார் நாற்பது வயதில்,சற்றே நினைவு கூறுங்கள்.நெஞ்சில் இதமாக ஒரு வித உணர்வு வந்து போகும்.இந்த எதிபார்ப்பில்லாத அன்பு தான் காதல்.நேசிப்பு.
மாறாக,கல்லூரி பருவத்திலோ,அல்லது பதின்ம வயதிலோ ஒரு ஆண் பெண்ணையோ,பெண் ஆணையோ,காதலிப்பதாக (சொல்லபடுவது) ஒன்றாய் சுற்றி,ஏதோ ஒரு சூழலில் ஒன்றி,ஒன்றாகி போய் இருந்தால்,இப்போது,சுமார் இருபது வருடங்கள் கழித்து,நினைவு கூறுங்கள்,உங்களுக்குள் ஒரு ஆனாகின்,கிளுகிளுப்பான அல்லது பென்னாகின் அருவருப்பான உணர்வு வந்து போகும்.
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு,முன்னது ஆட்டோகிராப்,பின்னது சிவப்பு ரோஜாக்கள்.ஆக காதல் எதிர்பார்ப்பில்லாத அன்பு,சக உயிர்களின் மேலான நேசிப்பு.காமம் இறந்தால், காதல் நீடித்து இருக்கிறது,காமம் இருந்தால் காதல் இறந்து விடுகிறது.காதலானது காமத்தில் அழிந்து விடுகிறது.ஆனால் காமம்-காதலின் முடிவல்ல.
இதனாலேயே,திருமணத்திலேயே அநேக காதல் முடிந்து விடிகிறது.திருமணம் வரை காதலை தேடியவர்கள்,திருமணமான முதல் நாளின் அன்றே காமத்தை தேட தொடங்குகிறார்கள். இவ்வாறனவர்கள் புதிதாய் காதலிக்கலாம்-முடிந்தவரை அவர்களையே.அடுத்தவர்களுடன் முயற்சித்தால்,அதற்கு நான் பொறுப்பல்ல.
ஒருமுறை, சென்னை,அண்ணா நகர்,ரவுண்டானா-இல் உள்ள கனரா வங்கியின் ஏடிம்-சென்றேன்.எனது பைக்யை,இருந்த இடைவெளியில் நிறுத்த முயற்சிக்கையில்,அருகில் நின்றிருந்த நபரை,லேசாக இடித்து விட்டேன்.என் காலும்,அவர் மீது பட்டு விட்டது.
சம்பிரதாயமாக சாரி சார்,என்றேன்.எப்படியும் இங்கே ஒரு குறைந்த பட்சம் வார்த்தை மீறலாவது வரும் என்று தான் எண்ணியிருந்தேன்.அவரோ,மிகவும் நிதானமாக பரவாயில்லை.என்று சொன்னார்.
நான் ஏடிஎம்-ஐ பார்த்தேன்,சில ஆண்,பெண்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.அவரோ பரவாயில்லை என்று நிதானமாக கூற,வேகமாக சென்ற நான் சற்றே தயங்கி,அவரிடம்,சார்,ஒரு பொண்ணுக்காக காத்து கொண்டிருகிறீர்களா.?என்றேன்.ஆமாம் என்ற அவர் முகத்தில் ஒரு சின்ன புன்னகை.
அவர் காதலனாக அறியபட்டிருக்கிறார்.......அந்த அதிசயத்தை உணர்ந்து கொண்டிருக்கிறார்.
காமம் இல்லாததால்,காதலிக்கவும்,காதலிக்கபடவும்,எதிர்பால் தான் வேண்டும் என்றில்லை.நேசியுங்கள்,நேசிக்கபடுங்கள்.
அனைத்தையும் சமமாக பாவியுங்கள்,அப்போது,அன்பு செலுத்துவது சுலபமாகிவிடும்.அன்பு செலுத்துங்கள்,அப்போது அன்பு கிடைப்பது சுலபமாகி விடும்.
என்ன மக்களே,காதலிப்பதும்,காதலிக்கபடுவதும்,உன்னதமான அதிசயம்தானே...
பின்குறிப்பு:இவ்வளவுக்கும் பிறகு,இல்ல எனக்கு காதல்-னாலே பிடிக்காது,நான் அப்படிபட்டவன் கிடையாது-ன்றவங்க கடைசிலே இருக்கிற அசின் படத்த ஒரு பத்து நிமிஷம் பாருங்க....பொண்ணுங்களுக்கு-என்ன சொல்றதுன்னு தெரியல்ல...நீங்களே ஒரு நல்ல முடிவுக்கு வாங்க.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
,இல்ல எனக்கு காதல்-னாலே பிடிக்காது,நான் அப்படிபட்டவ கிடையாது.
haha solunga ena seivinga
படிக்க நல்ல இருதாலும் படங்கள் ரசிக்கும் படியாக்க இல்லை
malar avarkale,
nanri.ini avvaaraaka illaathu paarthu kollkiren.
angel avarkale,
angel enraal-azhagu,parisutham,anbu.pin eppadi,neenkal appadi kidaiyathu enpeerkal?
//haha solunga ena seivinga//-pnkurippu-la kadaisi vari unkalkku thaan.
படிக்க நன்றாக் இருக்கிறது அசின் படங்கள் அழகு......முதல் படமும் பரவாயில்லை......இரண்டாம்.... மூன்றாம் படங்கள் காமத்தின் வெளிப்பாடு.......காதல் அழியாதது. காமம் தீர்ந்ததும் ....தணிந்து விடும். காதலில் ஆபாசம் இல்லை. காதலின் பின் காமம் வரலாம். ஆனால் காமதுக்காக் காதல் அல்ல. .
note" Please remove the word verification. it is kind of double work.
நன்றி நிலாமதி,
Post a Comment