Saturday, November 7, 2009

கல்யாணக் கடிதம்

கால ஓட்டத்தில் நிறைய மாரிதான் போய்விட்ட்டோம்.எத்தனையோ தொலைத்து,எதையோ பெற்று இருக்கிறோம்.அதில் ஒன்று தான் செல் போன்.இதற்க்காக நாம் தொலைத்தது-கடிதம்,தந்தி ஆகியன.

கடிதமானது பல வழிகளில் பயன் பட்டது.முதலாவதாக,மரியாதையை கற்று தந்தது.கடிதம் எழுதும் போது சம்பிரதாயமாக "அன்பும்,பண்பும்,பாசமும்,நிறைந்த,அப்பா அவர்களுக்கு,உங்களின் ஆசிர்வாதங்களுடன் மகன் மன்னார் அல்லது இன்னார்"-என்று தொடங்கும் கடிதம் நம்மை அறியாமலே நம்முள் ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.

ரெண்டவதாக,கடிதம் என்பது நாம் பிறர் பால் கொண்ட அன்பினை வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாகவும் இருந்தது.சொல்ல முடியாத சில உணர்வுகளை எழுத்தில் சொல்ல முடிந்தது.

மூன்றாவதாக,கடிதம் ஒரு காகிதமாக மட்டுமல்லாமல் கால புத்தகத்தில் பதிவு செய்யும் ஒரு பக்கமாகவே இருந்தது.முன்பெல்லாம் என் தாத்தா,நான் எழுதிய கடிதத்தை,அடுத்த கடிதம் வரும் வரை படித்து கொண்ட இருப்பார்.ஆக கடிதம் ஒரு நிலையான ஆதாரமாகவும் இருந்தது.

சில சமயங்களில் நமது எண்ணங்களை நாசுக்காக வெளிப்படுத்தும் ஊடகமாகவும் இருந்தது.எனவே நாம் தொலைத்தது கடிதம் மட்டுமல்ல,அதனால் கிடைக்கும் அனைத்து சந்தோஷமும் தான்.

இன்று செல் போன்-இல் எவ்வளவு நேரம் பேசினாலும்,போனை வைத்த பின்,பேசியவர்களின் அன்பு சந்தேகத்திற்கு இடமனதாகவே உள்ளது.பரஸ்பர அன்னியோனியத்தை தருவதில்லை.செல் போனில் தந்தி போல் பாவித்து பதில் போடவும் என தனது ஏக்கங்களை தெரிவிக்க முடியாது.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்,எங்கள் கிராமத்தில் இருந்து சென்னை-ல் மளிகை கடைக்கும்,ஓட்டலுக்கும் வேலைக்கு வருபவர்கள் ஏராளம்.படித்து நல்ல வேலைக்கு வருபவர்கள் சமீபத்தில் தான்.ஏனென்றல் எங்கள் கிராமத்தில் முதல் டிப்ளோமா படித்தவன் நான்(சரியாய் பத்து வருடத்திற்கு முன்).முதல் டிகிரி முடித்து என் தங்கை. அப்போதெல்லாம் கடிதம் மட்டுமே சாத்தியம்.டெலிபோன் கட்டணம் அதிகம்.டேலேபோனும் எங்கள் கிராமத்தில் இல்லை.இரண்டயிறது இரண்டில் தான் முதல் டெலிபோன் எங்கள் கிராமத்திற்கு/வீடிற்கு வந்தது.

அந்த சமயத்தில் சென்னையில் வேலை செய்யும் இருபத்தி ஐந்து மதிக்க தக்க ஒருவன் எழுதிய கடிதமும்,அவனது அப்பாவின் பதிலும் தான் இன்றைய பதிவு.

;மகனின் கடிதம்....
;
;
அன்பும்,பண்பும்,பாசமும் நிறைந்த அப்பா,அம்மா அவர்களுக்கு,உங்கள் பாசத்திற்குறிய மகன் சொரிமுத்து எழுதிக்கொள்வது என்னவென்றால்,இங்கு நான் நலம்.என்னோடு வேலை பார்க்கும் அனைவரும் நல்ல படியாக இருக்கிறோம்.அதுபோல் வீட்டில் நீங்கள்,அம்மா,தம்பி, தங்கை, அனைவர் நலமும் அறிய ஆவல்.பக்கத்துக்கு வீட்டு சித்தப்பா,சித்தி,அவர்கள் குழந்தை நலமா?.

மேலும் நீங்கள் அறிவது என்னவென்றால்,எனக்கு உடம்புக்கு சரியில்லை.வயிறு வலிக்குது. சாப்பாடு ஒத்துகொள்ளவில்லை என டாக்டர் கூறினார்.அதலால் ஊருக்கு வந்து விடலாம் என்று கூட எண்ணுகிறேன்.

இந்த கடிதம் கண்ட உடன் தந்தி போல் பதில் அனுப்பவும்.


இப்படிக்கு,
அன்புள்ள
சொரிமுத்து.


தந்தையின் பதில்...
;
;
அன்புள்ள மகன் சொரிமுத்து-க்கு அப்பா ஆயிராமு அனேக ஆசிர்வாதங்களுடன் எழுதிக்கொள்வது,உன் தபால் கண்டேன்.உன் நலம் அறிந்தேன் மகிழ்ச்சி.இங்கு இறைவன் அருளால் எல்லாம் நல்ல படியாக நடக்கிறது.நாங்கள் அனைவரும் நலம்.

மேற்படி,வயிற்று வலி பற்றி எழுதியிருந்தாய்.சில சமயம் வெளி சாப்பாடு இப்படி தொல்லை கொடுப்பதுண்டு.மேலும் இங்கு மழை பெய்துள்ளதால் விவசாய வேலை அவசரகதியில் நடந்து கொண்டியிருக்கிறது.ஆதலால் இப்போதைக்கு நீ புறப்பட்டு வருவது உசிதமல்ல.

இன்னொரு முக்கியமான செய்தி.நம்ம எதிர் வீட்டு "அடைமழை" மாமா மகள் வயசுக்கு வந்து நாலு வருஷம் ஆகிறது.அவர்கள் பொண்ணுக்கு கல்யாண விஷயம் பற்றி கேட்டுகொண்டே இருக்கிறார்.நல்லபுள்ளயாகவும்,நமக்கு தெரிந்த இடமாகவும் இருப்பதால், அவளையே உனக்கு முடித்து விடலாம் என நானும்,உன் அம்மாவும்,"அடைமழை" மாமாவோடு பேசி முடித்து இருக்கிறோம்.

அடுத்த மாசம் பத்தாம் தேதி நாள் நல்ல இருப்பதால்,அன்றே உறுதி செய்து விடலாம் என உள்ளோம்.ஆகையினால் பத்தாம் தேதியை கணக்கு பண்ணி வரவும்.மேற்கொண்டு விவரத்தை நேரில் பேசிக்கொள்ளலாம்.


இப்படிக்கு,
அப்பா,
ஆயிராமு.